கழிவுநீரேற்று நிலையங்கள் முறையாக செயல்படாததால் பாதிப்பு


கழிவுநீரேற்று நிலையங்கள் முறையாக செயல்படாததால் பாதிப்பு
x

பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவுநீரேற்று நிலையங்கள் முறையாக செயல்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்


பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவுநீரேற்று நிலையங்கள் முறையாக செயல்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம்

விருதுநகர் நகராட்சி பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.23.25 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றிட அனுமதி அளிக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குள் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் திட்ட பணி தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலை நீடிக்கிறது.

திட்டத்திற்கான கழிவுநீரேற்று நிலையங்கள் நகரில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் இருந்து மின்மோட்டாரை பயன்படுத்தி கழிவு நீர் பிரதான குழாய் மூலம் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்ட பின் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது.

பெரும் பாதிப்பு

ஆனால் கழிவு நீரேற்று நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் பழுதாகி உள்ள நிலையில் முறையாக கழிவுநீரேற்று நிலையங்களில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள கிணறுகள் நிரம்பி கழிவு நீர் செல்ல முடியாத நிலையில் பாதாள சாக்கடை பகிர்மான குழாய்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நகர் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண கழிவுநீரேற்று நிலையங்களில் பழுதாகி உள்ள மின்மோட்டார்களை சீரமைத்து கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் குடிநீருடன் கழிவு நீர் கலந்து நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


Next Story