பூதலூர் ரெயில்வே மேம்பால சாலையை சீரமைக்க வேண்டும்


பூதலூர் ரெயில்வே மேம்பால சாலையை சீரமைக்க வேண்டும்
x

குண்டும்-குழியுமான பூதலூர் ரெயில்வே மேம்பால சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

குண்டும்-குழியுமான பூதலூர் ரெயில்வே மேம்பால சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே மேம்பாலம்

திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள பூதலூரில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தின் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளங்களில் இருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதைப்போல விண்ணமங்கலம் அருகே இதே சாலையில் வெண்ணாற்றில் அமைந்துள்ள பாலமும் குண்டும்- குழியுமாகவே காணப்படுகிறது.செங்கிப்பட்டி -திருக்காட்டுப்பள்ளியை இணைப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story