சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x

அம்மாப்பேட்டை ரயில்வே கேட் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை ரயில்வே கேட் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே கேட்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரயில் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்லும் கூட்ஸ் ரயில்கள் தினசரி அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த நிலையில் ரயில் நிலையத்தையொட்டி அம்மாப்பேட்டையில் இருந்து வடுவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகே மேடு பள்ளமாக பழுதடைந்த நிலையில் சாலை உள்ளது.ரயில்கள் இந்த வழியாக செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுவதால் இருபுறமும் அதிக அளவில் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனர வாக னங்கள் தேங்கி நிற்கின்றன.

விபத்துகள்

ரயில்வே கேட்டை திறக்கும் போது வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது மேடு பள்ளங்களில் செல்லும் இருசக்கர வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து வாகன ஓட்டிகள் அடிபடுவதும் பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இந்த பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுடன் ெரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அம்மாப்பேட்ைடயில் ரயில்வே கேட்டின் இருபுறமும் மேடு பள்ளமாக பழுதடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story