உள்ளிக்கோட்டை சாலை சீரமைக்கப்படுமா?
உள்ளிக்கோட்டை சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவாரூர்
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே மதுக்கூர் ரோட்டிலிருந்து உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக உள்ளிக்கோட்டை கடைத்தெரு வரை செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும்- குழியுமாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி இருசக்கர வாகனங்கள், செல்ல முடியாத நிலை உள்ளது. உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இந்த சாலை வழியாக தான் செல்லவேண்டும். இந்த சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால் விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story