பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?


பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?
x

வடபாதிமங்கலத்தில் பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

வடபாதிமங்கலத்தில் பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

பாசன வாய்க்கால்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புனவாசல் பாசன வாய்க்கால் மதகு கட்டப்பட்டது. இந்த பாசன வாய்க்கால் மூலம் புனவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள வயல்களுக்கு, வெண்ணாற்றிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று நெல், உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி பணிகளை ஒவ்வொரு ஆண்டிலும் அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

இந்த பாசன வாய்க்கால் உள்பகுதியில் பழுதடைந்து விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. மதகில் பொருத்தப்பட்ட திருகு குழாய் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஆற்றில் இருந்து அதிகளவில் தண்ணீர் வரும் போது, திருகு குழாய் பலகையை மூட முடியவில்லை.இதனால், தேவையில்லாமல் அதிகளவில் தண்ணீர் சென்று வயல்களில் தேங்கி நின்று, சாகுபடி பணிகளை செய்து வருவதில் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். மேலும், பாசன வாய்க்கால் மதகை சுற்றிலும் அடர்ந்த புதர் செடிகள் சூழ்ந்து உள்ளது.எனவே, அடர்ந்த புதர் செடிகளை அகற்றி, பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் திருகு குழாய் பலகையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.


Next Story