கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?


கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?
x

சரஸ்வதி பூஜைக்கு முன்பு கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

குடவாசல்;

சரஸ்வதி பூஜைக்கு முன்பு கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சரஸ்வதி கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு தனி சன்னதியுடன் கோவில் உள்ளது கூத்தனூரில் மட்டும் தான். இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கல்விக்கு அதிபதி சரஸ்வதி என்பதால் 5 வயது வரை உள்ள குழந்தைகளை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து எழுத்து பயிற்சி அளிக்கிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் உள்ள தெரு மற்றும் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் ஒரு நாள் மழை பெய்தாலும் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் இந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.இந்திலையில் நேற்று ஒரு நாளில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது.சரஸ்வதி பூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. சரஸ்வதி பூஜையன்று கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். எனவே சரஸ்வதி பூஜைக்கு முன்பு கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story