உரம் தரம் பிரிக்கும் எந்திரங்கள் சேதம்
தேனி அருகே உரம் தரம் பிரிக்கும் எந்திரங்கள் சேதம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி
தேனி அருகே பூதிப்புரம் வசந்தம் நகரில் பேரூராட்சிக்கு சொந்தமான வளங்கள் மீட்பு பூங்கா உள்ளது. அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த பூங்காவுக்கு தற்காலிக தூய்மை பணி மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் சென்ற போது, அங்கு தரம் பிரிக்கும் சல்லடை எந்திரம், அரவை எந்திரம் மற்றும் தளவாட பொருட்கள் மர்ம நபர்களால் தூக்கி எரியப்பட்டு சேதம் அடைந்து கிடந்தன. இதுகுறித்து அவர் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயலட்சுமி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story