மின்னல் தாக்கி பட்டாசு உற்பத்தி அறை சேதம்


மின்னல் தாக்கி பட்டாசு உற்பத்தி அறை சேதம்
x

மின்னல் தாக்கி பட்டாசு உற்பத்தி அறை சேதமானது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் உற்பத்தி நடைபெறவில்லை. இந்நிலையில் மாலையில் பட்டாசு தயாரிக்கும் அறையின் மீது மின்னல் தாக்கியது. இதில் அந்த அறையின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Next Story