பொதுசொத்தை சேதப்படுத்துவதாக மிரட்டிய 2 பேர் கைது


பொதுசொத்தை சேதப்படுத்துவதாக மிரட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுசொத்தை சேதப்படுத்துவதாக மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த புதுமண்டபம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு என்கிற சந்திரசேகர் (வயது 29) என்பவர் டி.கே.மண்டபம் பஸ் நிறுத்தத்தில் நின்று, ஆபாசமாக பேசி பொது சொத்தை சேதப்படுத்துவதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவரை திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கைது செய்தார்.

இதேபோன்று, ஆவியூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களை வழிமறித்து மிரட்டும் வகையில் பேசியும், அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைக்க போவதாக மிரட்டல் விடுத்து வடக்குநெமிலி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அய்யப்பன் என்பவரை திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story