பனைமரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை சேதம்


தினத்தந்தி 23 April 2023 12:30 AM IST (Updated: 23 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் பனைமரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.

திண்டுக்கல்


பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையே நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அந்தவகையில் பழனி சண்முகநதி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 51) என்பவரது வீட்டின் அருகே இருந்த பனை மரத்தின் ஒரு பகுதி முறிந்து அங்குள்ள வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது. இதில் மேற்கூரை மற்றும் பக்க சுவர் சேதம் அடைந்தது. நல்ல வேளையாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.





Next Story