ஆரோட்டுப்பாறை - எல்லமலை இடையே தரைப்பாலம் சேதம் - சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஆரோட்டுப்பாறை - எல்லமலை இடையே தரைப்பாலம் சேதம் - சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரோட்டுப்பாறை - எல்லமலை இடையே தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

ஆரோட்டுப்பாறை - எல்லமலை இடையே தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தரைப்பாலம் சேதம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை, பாரதி நகர், எல்ல மலை, பெரிய சோலை, சூண்டி, காந்திநகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். இதனால் அரசு பஸ்கள், அறுவடை செய்த பச்சை தேயிலை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரிகள் உள்பட ஏராளமான தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆரோட்டுப்பாறையில் இருந்து எல்லமலைக்கு சுமார் 4 கி.மீட்டர் தூரத்துக்கு தார் சாலை செல்கிறது. தினமும் ஏராளமான மக்கள் பயணம் செய்யும் வழித்தடத்தில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. தொடர்மழை வெள்ளத்தால் தரை பாலம் நீண்ட காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் சேதமாகி வருகிறது. தொடர்ந்து பாலம் உடையும் நிலையில் உள்ளது.

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணனிடமும் மனு அளித்தனர். நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

இது குறித்து சுபாஷ் நகரை சேர்ந்த ரஞ்சித் கூறியதாவது:-

தரைபாலம் சேதமடைந்துள்ளதால் எல்லமலை பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இப்பாலம் உடைந்தால் ரேசன் கடைக்கு பொருட்கள் கொண்டு செல்வது தடைபடும். போக்குவரத்து துண்டிக்கப்படும் சமயத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேகர் கூறியதாவது:- இப்பாலம் அமைத்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் பழுதடைந்து விட்டது. தரமற்ற கட்டுமான பணியால் சில வருடங்கள் கூட தாக்கு பிடிக்காமல் விரைவில் பழுதடைந்து விட்டது. நாளடைவில் உடைந்து போக்குவரத்து துண்டித்தால் பல கிராம மக்கள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story