பழுதடைந்த குடிநீர் கைப்பம்புகள்
கூத்தாநல்லூர் அருகே ஓவர்ச்சேரியில் பழுதடைந்த குடிநீர் கைப்பம்புகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே ஓவர்ச்சேரியில் பழுதடைந்த குடிநீர் கைப்பம்புகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைப்பம்புகள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி கிராமத்தில், கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள தெருக்களில் கைப்பம்பு பொருத்தப்பட்டது. இதை ஓவர்ச்சேரி கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குடிநீர் தேக்கத்தொட்டியில் பழுது ஏற்படும் நேரங்களிலும், மின்நிறுத்தம் செய்யப்படும் நேரங்களிலும் இந்த கைப்பம்புகள் மூலம் கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.
சீரமைக்க கோரிக்கை
கடந்த சில வருடங்களாக இக்கிராமத்தில் பொருத்தப்பட்ட 3 கைப்பம்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், பல மாதங்களாக அந்த 3 கைப்பம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை. குறிப்பாக இக்கட்டான நேரங்களில் குடிதண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பழுதடைந்த குடிநீர் கைப்பம்புகளை சீரமைத்து மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.