சேதமடைந்த குடிநீா் தொட்டி


சேதமடைந்த குடிநீா் தொட்டி
x
தினத்தந்தி 13 Jan 2023 12:45 AM IST (Updated: 13 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த குடிநீா் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;கூத்தாநல்லூர் அருகே உள்ள, குலமாணிக்கம் பகுதியில் அன்னுக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வசதியாக சிறிய அளவில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த குடிநீர் தேக்கத்தொட்டி போதிய பராமரிப்பு இன்றி சேதம் அடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தேக்கத்தொட்டி மற்றும் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story