கண்மாய்களில் சேதமடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும்


கண்மாய்களில் சேதமடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும்
x

கண்மாய்களில் சேதமடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

கண்மாய்களில் சேதமடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் கூறுகையில், காரியாபட்டி சென்னம்பட்டி கால்வாய் வழித்தடத்தில் தோப்பூர் கிராமத்தை இணைத்து பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலையம்பட்டி பெரிய கண்மாயில் கழிவு நீர் செல்வதை தடுக்க வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டத்தில் குளறுபடியை சரிசெய்யவேண்டும். கல்குவாரி கிரஷர் கனரக வாகனங்கள் பன்னீர்குண்டு கண்மாய் கரையில் செயற்கையாக பாதை அமைத்து கல் எடுத்து செல்வதை தடுக்க வேண்டும். கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உரிய நடவடிக்கை

மாநில துணைத்தலைவர் மச்சேஸ்வரன் கூறுகையில், பல கண்மாய்களில் மடை சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

முடுக்கங்குளம் சிவசாமி:- ஸ்ரீவில்லிபுத்தூர் வன இலக்கா கூட்டம் அருப்புக்கோட்டை விவசாயிகளை உள்ளடக்கி மாதாந்திர கூட்டமாக நடத்தவேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் உறுதி அளித்தார். கூட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story