பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்
குன்றில்கடவு-பொன்னானி இடையே பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே குன்றில்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் பொன்னானிக்கு வந்து செல்கிறார்கள். அப்பகுதியில் இருந்து பொன்னானிக்கு நடைபாதை செல்கிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நடைபாதையையொட்டி இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் நடைபாதை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இடிந்த தடுப்புச்சுவர் மற்றும் பழுதடைந்த நடைபாதை மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக ரேஷன் பொருட்களை கொண்டு வர சிரமமமாக உள்ளது. எனவே, நடைபாதை மற்றும் தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story