சேதமடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க வேண்டும்


சேதமடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க வேண்டும்

திருவாரூர்

நீடாமங்கலம் ஒன்றியம் கீழாளவந்தசேரியில் சேதமடைந்த அரசு கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கீழாளவந்தசேரி ஊராட்சியில் கீழாளவந்தசேரி, கருவேலங்குலம், கற்கோவில் என 3 கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மாதர் சங்க கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்களும், அலுவலகத்திற்கு வருபவர்களும் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

மேலும் கருவேலங்குலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் மற்றும் அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி குழந்தைகளும், மாணவர்களும் ்சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story