கயத்தாறில் சேதமடைந்த கட்டபொம்மன் மண்மண்டப சுவரை சீரமைக்க நடவடிக்கை


கயத்தாறில் சேதமடைந்த கட்டபொம்மன் மண்மண்டப சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் ஆம்னி பஸ் மோதியதில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தின் சுவர் 10 அடி தூரத்திற்கு சேதமடைந்தது. இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி உதவி கலெக்டர் சரவணன், கயத்தாறுதாசில்தார் சுப்புலட்சுமி, பேரூராட்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினரும் உடனிருந்தனர். சேதமடைந்த மணிமண்டப சுற்றுச்சுவரை சீரமைக்க விரைவில் டெண்டர் விடப்பட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வெளிநபர்கள் யாரும் மண்டபத்திற்குள் செல்லாதவாறு வேலி அமைக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story