சேதமடைந்த ஜாம்புவானோடை மேலவெளி சாலையை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த ஜாம்புவானோடை மேலவெளி சாலையை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த ஜாம்புவானோடை மேலவெளி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜாம்புவானோடை மேலவெளி சாலை
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை மேலவெளி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சீரமைக்க வேண்டும்
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலை வழியாக செல்லும் மாணவர்களின் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள ஜாம்புவானோடை மேலவெளி சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.