கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க ேவண்டும்


கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க ேவண்டும்
x

கூத்தாநல்லூர் அருகே, தென்கோவனூர் கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க ேவண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே தென்கோவனூரில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதன் முகப்பில் உள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இருப்பதால் மழைநீர் ஒழுகி ஆவணங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story