பொதுசொத்தை சேதப்படுத்தி ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல்


பொதுசொத்தை சேதப்படுத்தி ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல்
x

பொதுசொத்தை சேதப்படுத்தி ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வார்டு உறுப்பினரின் கணவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

பொதுசொத்தை சேதப்படுத்தி ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வார்டு உறுப்பினரின் கணவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட எத்திராஜ் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் தேவைக்காக மொழுகம்பூண்டி செல்லும் வழியில் உள்ள பொது இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை தொட்டியில் ஏற்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பையூர் ஊராட்சியின் 5-வது வார்டு உறுப்பினர் யோகேஸ்வரியின் கணவர் சாந்தகுமார் என்பவர் போர்வெல் அமைக்கப்பகட்டுள்ள இடம் தனக்கு சொந்தமானது என்றும் அங்கு செங்கல் சூளை அமைக்கப்போவதாகவும் கூறி ஆழ்துளை கிணறை மூடிவிட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பையூர் ஊராட்சி தலைவர் ஏ.சரவணன், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளருடன் சென்று சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினரின் கணவர் சாந்தகுமாரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் ஊராட்சி மன்ற தலைவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது சம்பந்தமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம் ஊராட்சி) இல.சீனிவாசனிடம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இல.சீனிவாசன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில் அரசு பொது சொத்தை சேதப்படுத்திய சாந்தகுமார், ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story