சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 48 மில்லிமீட்டர் மழைபதிவு
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 48 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சேலம்
தம்மம்பட்டியில் மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று மாநகர் பகுதியில் மேகமூட்டம்மட்டுமே காணப்பட்டது.
அவ்வப்போது லேசான மழை தூறல் விழுந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மழை இல்லை. நேற்று முன்தினம் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 48.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மழையளவு
மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பதிவாகி உள்ள மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- கெங்கவல்லி-44. வீரகனூர்-32, ஆத்தூர்-30, கரியக்கோவில்-24, பெத்தநாயக்கன்பாளையம்-23, ஆனைமடுவு-13, சங்ககிரி-7.3, ஏற்காடு-7.2, மேட்டூர்-5.5, எடப்பாடி-5.4, சேலம்-5, காடையாம்பட்டி-3.
Related Tags :
Next Story