இஸ்கான் கோவிலில் தாமோதர தீபத்திருவிழா
நெல்லை வண்ணார்பேட்டை இஸ்கான் கோவிலில் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாமோதர தீபத்திருவிழா தொடங்குகிறது.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாமோதர தீபத்திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. கிருஷ்ணரை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டு இந்த தாமோதர தீபத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் தங்களின் கரங்களால் தாங்களே நேரடியாக கிருஷ்ணருக்கு தீப ஆர்த்தி காட்டலாம். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகிறார்கள். இந்த தகவலை, இஸ்கான் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story