காளியம்மன் கோவில்களில் திருநடன விழா


காளியம்மன் கோவில்களில் திருநடன விழா
x

திருவாரூர் அருகே காட்டூர் காளியம்மன் கோவில்களில் திருநடன விழா நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கீழத்தெருவில் உள்ள மகாகாளியம்மன் கோவில் மற்றும் பொற்பவன் காளியம்மன் கோவில்களில் காளிகட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து திருநடன விழா நடந்தது. முன்னதாக அக்காள் தங்கைகளாக கருதப்படும் மகாகாளியம்மன் மற்றும் பொற்பவன் காளியம்மன் கோவில்களில் இருந்து தனித்தனியாக புறப்பட்டு காட்டூர் பிடாரியம்மன் அரசமரத்தடியில் ஒன்றிணைந்து திருநடனம் ஆடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி வழிபட்டனர். மகா காளியம்மன் மற்றும் பொற்பவன் காளியம்மன் திரு நடனத்தையடுத்து முக்கிய வீதிகளில் வீதி உலா காட்சி நடைபெற்றது. வருகிற 16-ந் தேதி விடையாற்றி விழாவுடன் நிறைவுபெறுகிறது.


Next Story