நடனமாடியபடி தெலுங்கானா கலை குழுவினர் கிரிவலம்


நடனமாடியபடி தெலுங்கானா கலை குழுவினர் கிரிவலம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடனமாடியபடி தெலுங்கானா கலை குழுவினர் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடனமாடியபடி தெலுங்கானா கலை குழுவினர் கிரிவலம் சென்றனர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாவனாலயா கலைக் குழுவைச் சேர்ந்த மாணவிகள் யாதகிரி ஆச்சாரி தலைமையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இவர்கள் நடனமாடியபடி கிரிவலம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோவில் ராஜகோபுரம் முன்பு இருந்து கிரிவலத்தை தொடங்கினர். 14 கிலோமீட்டர் தூரம் நடனம் ஆடியபடியே வலம் வந்தனர்.

இது உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். நடனம் ஆடியபடியே வலம் வந்த தெலுங்கானா நடன கலைஞர்களை திருவண்ணாமலை நகர மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.



Next Story