சித்தோட்டில் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீதம்


சித்தோட்டில் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீதம்
x

சித்தோட்டில் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு

பவானி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புங்கம்பாடியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 30). பரதநாட்டிய கலைஞர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காவியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சுபாஷ் சந்திரபோஸ் ஈரோடு மாவட்டம் சித்தோடு இந்திரா நகரில் குடும்பத்துடன் தங்கிக்கொண்டு, நாட்டிய வகுப்பும் நடத்தி வந்தார். இதற்கிடையே நடன நிகழ்ச்சிக்காக காவியா வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு சுபாஷ் சந்திரபோஸ் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story