மரபுசார் கலைநிகழ்ச்சிகள் தொடக்கம்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் மரபுசார் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் கூடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் பொங்கல் விழாவையொட்டி மரபுசார் கலை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. தொடக்கவிழாவுக்கு தஞ்சை சரசுவதி மகால் நூலக ஆளுமை குழு ஆயுள் கால உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே தலைமை தாங்கினார்.இதில் சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறன், கலைக்கூடம் காப்பாட்சியர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மாவட்டதொல்லியல் அலுவலர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக, தொல்லியல் அலுவலர் உமையாள் வரவேற்றார். முடிவில் தொல்லியல் அலுவலர் சாய்பிரியா நன்றி கூறினார்.இதைத்தொடர்ந்து, காலையில் நாதசுரம், கரகாட்டம், காவடியாட்டம், பிற்பகலில் தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெற்றன.
Related Tags :
Next Story