டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பந்தலூர் அருேக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே ேடன்டீ தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.425.40 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே, தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வழங்க டேன்டீ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பச்சை தேயிலை பறிக்காத இடங்களில் தேயிலை பறிக்க வேண்டும், தொழிலாளர்களின் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. தினமும் பணியின் போது காலை, மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story