ஆபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்


ஆபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்
x

ஆபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வந்து சேரும் பிரதான சாக்கடை கால்வாய் சாலையோரம் உள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு அந்த கால்வாயை கட்டுவதற்காக கம்பிகள் அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் அந்த பணி நிறைவடையாமல் கம்பிகள் நீட்டிக் கொண்டிருந்தபடியே பொதுமக்களுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அங்கு கழிவுநீர் சேரும் இடத்தில் பெரிய குழியில் திறந்த நிலையில் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---


Related Tags :
Next Story