அதிவேகத்தில் செல்லும் மண் லாரிகளால் விபத்து அபாயம்


அதிவேகத்தில் செல்லும் மண் லாரிகளால் விபத்து அபாயம்
x

பழனி அருகே அதிவேகத்தில் செல்லும் மண் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் ஏராளமான செங்கள் சூளைகள் உள்ளன. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து லாரிகளில் மண் ஏற்றி இங்குள்ள சூளைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் இங்குள்ள பட்டா நிலங்களில் இருந்தும் மண் அள்ளி பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாலசமுத்திரம் பகுதி வழியாக செல்லும் மண் லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தினமும் சுமார் 50 லாரிகளில் மண் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக செல்கிறது. இந்த லாரிகள் குடியிருப்பு பகுதிகளிலும் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் சாலையில் கடும் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதேபோல் வேகமாக செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகள் சாலைகளில் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். எனவே வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story