தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அபாய பள்ளம்..!


தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அபாய பள்ளம்..!
x

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காணப்படும் அபாய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக்நகர் அருகே சாலைக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பலமுறை சரிசெய்தும், அதே இடத்தில் மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் தாளமுத்துநகரை சேர்ந்த 2 பேர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி நோக்கி சென்றனர். அவர்களுக்கு முன்னால் சென்ற வேனின் டிரைவர் சாலையில் பள்ளத்தை கண்டதும் திடீர் பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வேனின் பின்பக்கம் மோதி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், இந்த சாலையில் உள்ள அபாய பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, அந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



Next Story