சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான குழிகள்
சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான குழிகள்
தொண்டி
திருவாடானை தாலுகா மங்கலக்குடியிலிருந்து திருவாடானை செல்லும் சாலை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தச் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொது மக்கள் மற்றும் வாகனங்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள குண்டு குழிகளில் விழுந்து விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இரவு நேரங்களில் சாலைப் பள்ளங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த சாலையில் சேதமடைந்து உள்ள குண்டும் குழிகள் மற்றும் பள்ளங்களை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி ஊராட்சி தலைவர்கள் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து மனுக்கள் அனுப்பி உள்ளனர்.