சாலையோரத்தில் அபாய பள்ளம்
திருக்காட்டுப்பள்ளியில் புதிய மேட்டு கட்டளை கால்வாய் பாலத்தையொட்டி சாலையோரத்தில் உள்ள அபாய பள்ளம் சீரமைககப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளியில் புதிய மேட்டு கட்டளை கால்வாய் பாலத்தையொட்டி சாலையோரத்தில் உள்ள அபாய பள்ளம் சீரமைககப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அபாய பள்ளம்
திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி சாலையில் புதுப்பட்டி கிராமத்தின் அருகே புதிய மேட்டு கட்டளை கால்வாய் பாலம் அமைந்துள்ளது .இந்த பாலம் கடந்த ஆண்டில் விரிவுப்படுத்தி கட்டப்பட்டது .இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள கைப்பிடி சுவர் குறைந்த உயரத்திலேயே இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், கால்வாய்க்குள் தவறி விழும் நிலை உள்ளது. மேலும், இந்த பாலத்தின் கிழக்குப் பகுதியில் சாலையில் இருந்து மழைநீர் கால்வாய்க்குள் செல்வதால், அந்த இடத்தில் மண் அரிப்பு ஏறபட்டு பெரிய அளவில் அபாய பள்ளம் உ ள்ளது. இதனால் இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழும் நிலை இருநது வருகிறது. குறிப்பாக இரவில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைய வாய்ப்பு உள்ளது.
சீரமைக்க வேண்டும்
மழை காலத்தில் இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுதெரியாமல் நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மேட்டு கட்டளை கால்வாயில் பாலத்தின் கைப்பிடிச் சுவரை உயர்த்தி அமைத்து அதில் ஒளிரும் சிவப்பு விளக்குகள் பொருத்த வேண்டும்.
மேலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.