உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்


உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்
x

சீர்காழி அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான பயணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து சென்னியநல்லூர், பெரம்பூர், குன்னம், கடுக்காய்மரம், புத்தூர், எருக்கூர், அரசூர் வழியாக மாதிரவேளூர் கிராமத்துக்கு தினந்தோறும் தனியார் பஸ் சென்று வந்து கொண்டிருக்கிறது. இந்த பஸ் மூலம் சீர்காழி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வருகிறார்கள். காலை நேரம் பள்ளி, கல்லூரி நேரம் என்பதால் அந்த நேரத்தில் வந்து செல்லும் இந்த தனியார் பஸ்சில் அதிக அளவு கூட்டம் உள்ளது. இதனால் மாணவர்கள் பஸ்சில் உள்ள 2 வாசல் படிக்கட்டுகளிலும் பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியிலும் தொங்கியபடி சுமார் ஐந்து முதல் 7 கிலோமீட்டர் தூரம் வரை தினமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறர்கள்.

காலை நேரம்

பஸ்வேகமாக செல்லும் போது மற்றும் மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும் போது மாணவர்கள் படிக்கட்டில் இருந்து தவறி விழும் அபாயம் உள்ளது. இது குறித்து மாணவர்களிடம் கேட்ட போது காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் தினமும் காலை நேரத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு உயிருக்கு ஆபத்தான நிலையல் பள்ளி, கல்லூாிகளுக்கு சென்று வருகிறோம். இந்த பஸ் இயக்கப்படும் பகுதியில் கிராமங்கள் அதிகமாக உள்ளதால் காலையில் பெரும்பாலான ஏழை மக்கள் இந்த பஸ்சில் சென்று வருகிறார்கள்.

கூடுதல் பஸ்கள்

குறிப்பாக மழைக்காலத்தில் காலையில் இது போன்ற இடையூறுகளை சந்திப்பதால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.எனவே மாணவ- மாணவிகள் நலன் கருதி அரசூர், எருக்கூர், புத்தூர், குன்னம், சென்னியநல்லூர் வழியாக மாதிரவேளூருக்கு மாவட்ட நிர்வாகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story