அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்
அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்
பந்தலூர்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அய்யன்கொல்லி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்திசால், பாதிரிமூலா, காரக்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, கருத்தாடு, செம்பக்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி உள்ள சாலையோரத்தில் அபாயகரமான நிலையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன. அதில் பட்டுப்போன மரங்களும் அடங்கும். சூறாவளி காற்று வீசும்போது, அந்த மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் நிற்கிறது. அவற்றின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் மின் விபத்து ஏற்படுகிறது. மேலும் சூறாவளி காற்று வீசினால், சாய்ந்து விழும் நிலையில்தான் அந்த மரங்கள் காணப்படுகின்றன. இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வரவே அச்சமாக உள்ளது. எனவே முன்எச்சரிக்கையாக அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றனர்.