அடஞ்சாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அடஞ்சாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அடஞ்சாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்

வி.மேட்டுப்பாளையம்,

வெள்ளகோவில் அருகே வீரசோளபுரம் அடஞ்சாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அடஞ்சாரம்மன் கோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் நட்டாத்தி வகையறா நாட்டுவ நாடார் குலத்தினரின் குலதெய்வமாகிய அடஞ்சாரம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பழமை வாய்ந்த இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 28- ந்தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

29- ந்தேதி இரவு பிரவேச பலி, தசா ஹோமம், சாந்தி் ஹோமம் ஆகியவை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து. கொடுமுடியில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது பெண்கள் முளைப்பாறி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு நான்குகால பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்றது. நேற்று பரிவார கலசங்கள் மூலாலயம் அடைதல், மூலவர் கலசம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

அதைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது.அதைத் தொடர்து அடஞ்சாரம்மனுக்கு மகாகும்பிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இணைச்செயலாளர் ஏ.ஆனந்தகுமார், நட்டாத்தி நாடார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயலாளர் ஜி.கமலக்கண்ணன் ஆகியோர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

இதில் கோவில் திருப்பணி குழு தலைவர் சக்திவேல், செயலாளர் நாச்சிமுத்து, பொருளாளர் மனோகரன், துணைத்தலைவர்கள் சேதுபதி, கூடலரசன், முருகேசன், துணை செயலாளர்கள் குருசாமி, ரமேஷ், இணை செயலாளர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், பெரியசாமி, காமராஜ், தங்கவேல், கிருஷ்ணன், முத்துச்சாமி, குணசேகரன் மற்றும் குடிபாட்டு மக்கள்,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.



Next Story