நாகூர் சில்லடி தர்காவில் சந்தனக்கூடு விழா
நாகூர் சில்லடி தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது.
நாகப்பட்டினம்
நாகூர்;
நாகை மாவட்டம் நாகூாில் சில்லடி தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக சந்தனகூடு ஊர்வலம் தர்கா அலங்கார வாசலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று சில்லடி தர்காவை சென்று அடைந்தது. நாகூர் ஆண்டவர் 40 நாட்கள் தவம் இருந்த இடத்தில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story