மரத்தில் கார் மோதி டிரைவர் பலி


மரத்தில் கார் மோதி டிரைவர் பலி
x
திருப்பூர்


திருப்பூர் வீரபாண்டி சபாபதிநகரை சேர்ந்தவர் முருகானந்தன் (வயது 66). இவர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று நிறுவனத்தின் உரிமையாளர் மனைவியை காரில் கரூருக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, காரை கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்தார். காங்கயத்தை அடுத்த சிவன்மலை அரசம்பாளையம் பகுதியில் கார் வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக்கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று முருகானந்தத்தை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகானந்தத்தை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story