ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருப்பத்தூரில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாகாளய அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர். நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளங்கள் மற்றும் கோவில்களில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருப்பத்தூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், சின்ன குளம் பெரியகுளம், வெங்களாபுரம், பெருமாள் கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற கோவில்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அம்மாவாசையையொட்டி திருப்பத்தூர் பகுதியில் அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. திதி கொடுக்க வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story