மழைவேண்டி அகண்ட தீபம் ஏற்றி தரிசனம்


மழைவேண்டி அகண்ட தீபம் ஏற்றி தரிசனம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மழைவேண்டி அகண்ட தீபம் ஏற்றி தரிசனம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரு.வி.க நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இயற்கை வழிபாடு மூலம் அகண்டதீபம் ஏற்றும் விழா நேற்று நடந்தது. மழைவளம் வேண்டியும், நோய்த்தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டியும் குரு பூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையின் உள்ளே அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தாமரை சக்கரத்தில் 5 கன்னிப்பெண்கள் கையில் காமாட்சி விளக்கு ஏந்தி நின்றனர். முக்கோண சக்கரத்தில் சிறுவர்கள் 5 பேர் அகல்விளக்கு ஏந்தி நின்றனர். அறுங்கோண சக்கரத்தில் 5 சிறுமியர் மாவிளக்கு ஏந்தி நின்றனர். செவ்வக சக்கரத்தில் நடுத்தர வயது சுமங்கலிகள் 5 பேர் சாத்துக்குடி விளக்கு ஏந்தி நின்றனர். எண் கோன சக்கரத்தில் இளவயது சுமங்கலிகள் 5 பேர் ஓம் சக்தி விளக்கு ஏந்தி நின்றனர். வட்ட சக்கரத்தில் மூத்த சுமங்கலி பெண்கள் 3 பேர் ஆப்பிள் விளக்கு ஏந்தி நின்றனர். கருவறையில் இருந்து புறப்பட்ட அகண்ட தீபத்தை 1 கன்னிப்பெண், 2 சிறுமியர் எடுத்து வந்தனர். சீர்வரிசை பொருட்களான நவதானியம், நெல், மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம் முன் செல்ல அனைத்து சக்கரங்களையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையில் தென்கிழக்கு மூலையில் தீபம் வைக்கப்பட்டது. இந்த தீபத்துக்கு பொதுமக்கள், பக்தர்கள் 24 மணி நேரமும் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தரிசனம் செய்யலாம். இதே போன்று மேலூர் சக்தி பீடம், தெர்மல்நகர் சக்தி பீடத்திலும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டு உள்ளது.


Next Story