கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்- காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தினார்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
இந்துக்கள் உரிமை மீட்பு பிரசாரம்
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி வரவேற்றார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து ெகாண்டனர். முடிவில் தென்காசி நகர தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.
தரிசன கட்டணம் ரத்து
முன்னதாக, காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதமாற்ற தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் இருந்து வெளியேறி அதற்கு தனிவாரியம் அமைக்க வேண்டும். கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
திருப்பரங்குன்றத்தில் மடத்துக்கு சொந்தமான இடத்தை வேறு மதத்தினர் ஆக்கிரமித்து உள்ளதை மீட்க வேண்டும். அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.