மீனாட்சி அம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்


மீனாட்சி அம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
x

மீனாட்சி அம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்

மதுரை


திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டும், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் திருவண்ணாமலைக்கும் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு எம்.பி.யான பிறகு இளையராஜா, சாமி தரிசனம் செய்ய நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அதிகாலை 5 மணியளவில் வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுமார் அரை மணிநேரம் தரிசனம் செய்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Next Story