திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலங்கை கவர்னர் சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலங்கை கவர்னர் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜன் இன்று வந்தார்.
பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதைதொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கடைகளுக்குச் சென்று பஞ்சாமிர்தம், விபூதி, கை செயின் போன்ற பொருட்களை வாங்கினார். ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும், அதன் விலைகளைக் கவர்னர் ஜீவன் தியாகராஜன் கேட்டுக் கேட்டு வாங்கினார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், கவர்னர் ஜீவன் தியாகராஜன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story