சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ஆர்என்ரவி சாமி தரிசனம்


சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ஆர்என்ரவி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ஆர்என்ரவி சாமி தரிசனம் செய்தாா்.

கடலூர்

சிதம்பரம்.

மகாசிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமி ரவியுடன் கலந்து கொண்டு பரத நாட்டியத்தை பார்த்து ரசித்தார்.பின்னர் இரவு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கி ஓய்வு எடுத்தார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 8 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் வந்தார். அவருக்கு கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி நடராஜரையும், சிவகாம சுந்தரியையும் தரிசனம் செய்தார். பின்னர் சிதம்பரம் ஓம குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்த சுவாமி சகஜானந்தா ஜீவ சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கார் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story