சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலமாக 99 சிறுதொழில் முனைவோர்களுக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் உதவித்தொகை, 21 ஆதரவற்ற ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் உதவித்தொகை, 26 ஆதவற்ற விதவைகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் உதவித்தொகை, 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம், முதியோர், மாணவர்கள் உள்பட மொத்தம் 202 பேருக்கு ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 320 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ரவிச்சந்திரன், திருப்பூர் மாவட்ட மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் முகமது ஜெக்ரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.