குன்னூரில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி


குன்னூரில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி
x
தினத்தந்தி 25 May 2023 4:45 AM IST (Updated: 25 May 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி நடக்கிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவர 3½ டன் பழரச பானங்கள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட் டுள்ளது.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி நடக்கிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவர 3½ டன் பழரச பானங்கள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட் டுள்ளது.

பதனிடும் நிலையம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலைத்துறையின் கீழ் சிம்ஸ் பூங்கா உள்ளது. கோடை சீசனையொட்டி பூங்காவில் பல்வேறு ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழாவையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் 63-வது பழக் கண்காட்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை), 28-ந் தேதி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பூங்காவை கண்காட்சிக்கு தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா பழம் பதனிடும் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பழரச பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

பழரச பானங்கள்

இதைத்தொடர்ந்து பழரச பானங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிம்ஸ் பூங்கா அருகில் பழப்பண்ணை உள்ளது. இங்கு பிளம்ஸ், பேரிக்காய், கொய்யா, நீலகிரி ஆப்பிள் போன்ற பழ மரங்கள் உள்ளன. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை கொண்டு பழம் பதனிடும் நிலையத்தில் பழரச பானங்கள், ஊறுகாய், ஜாம் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் சிம்ஸ் பூங்கா பழம் பதனிடும் நிலையத்தில் பழரச பானங்கள், ஊறுகாய், ஜாம், ஜெல்லி 3½ டன் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு பழங்களை கொண்டு 3½ டன் பழரச பானங்கள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த பானங்கள் தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் விற்பனை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பழக் கண்காட்சி நெருங்குவதால், சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக பழரச பானங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றனர்.


Next Story