மகாசிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு நாளைமறுநாள் உள்ளூர் விடுமுறை
மகாசிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு நாளைமறுநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகாசிவராத்திரியை முன்னிட்டு 18-ந் தேதி (சனிக்்கிழமை) குமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற மார்ச் மாதம் 25-ந் தேதி (நான்காவது சனிக்கிழமை) மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
நாளை மறு நாள் குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது/
--
Related Tags :
Next Story