மாற்றுத்திறனாளிகள் தின விழா
மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. காலையில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தொடங்கி வைத்தார். தென்காசி சக்தி நகர் நுழைவு வாயிலில் இருந்து தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அமர்சேவா சங்க செயலாளர் சங்கரராமன் வரவேற்று பேசினார். தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். தென்காசி மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமர்சேவா சங்க மறுவாழ்வுத்துறை தலைவர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.