தாளவாடியில் பட்டப்பகலில் துணிகரம்: கோவிலில் சாமி சிலைகள்,உண்டியல் திருட முயன்றவர் கைது


தாளவாடியில் பட்டப்பகலில் துணிகரம்: கோவிலில் சாமி சிலைகள்,உண்டியல் திருட முயன்றவர் கைது
x

தாளவாடியில் பட்டப்பகலில் கோவிலில் சாமி சிலைகள், உண்டியல் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் பட்டப்பகலில் கோவிலில் சாமி சிலைகள், உண்டியல் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

மல்லிகார்ஜுனா சாமி கோவில்

தாளவாடியில் பிரசித்திபெற்ற மல்லிகார்ஜுனா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகராக சோமன்னா என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சோமன்னா கோவில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலை 4 மணியளவில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோமன்னா உள்ளே ஓடிச்சென்று பார்த்தார். கருவறையில் இருந்த மல்லிகார்ஜூனா சாமி சிலையின் பீடமும், கருவறையின் முன்பு இருந்த இரும்பு உண்டியலும் பெயர்த்து எடுப்பதற்காக உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலையும், உண்டியலும் திருடு போகவில்லை அப்படியே இருந்தது.

கேமரா காட்சிகள்

அர்ச்சகர் சோமன்னா வீட்டுக்கு சென்றபிறகு யாரோ மர்ம நபர் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர் பட்டப்பகலிலேயே கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அதன்பிறகு சிலையையும், உண்டியலையும் திருடிவிட்டு செல்வதற்காக பெயர்க்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால் யாராவது வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று அப்படியே விட்டுவிட்டு ஓடி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சோமன்னா உடனே தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கைது

கண்காணிப்பு கேமராவில் மர்மநபர் ஒருவர் கோவில் கதவை உடைத்து உள்ளே செல்வது தெரிந்தது. மேலும் சாமி சிலையையும், உண்டியலையும் பெயர்க்க முயற்சி செய்த காட்சிகளும் பதிவாகியிருந்தது. அதை வைத்து சம்பந்தப்பட்ட மர்ம நபர் யார்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் அவர், தாளவாடி அடுத்த ஒசூர் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 45) என்பவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடிச்சென்றபோது அவர் மாயமாகிவிட்டார். இதனால் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஒசூர் கிராமத்திேலயே பதுங்கியிருந்த குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Related Tags :
Next Story