போதை ஒழிப்பு உறுதி மொழி


போதை ஒழிப்பு உறுதி மொழி
x

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்திலுள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கினார். கல்லூரி பர்சார் தனபால் முன்னிலை வகித்தார். ஆட்டோமொபைல் துறைத் தலைவர் ஜாண் வெஸ்லி போதை ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் ஜான்சன் டேவிட் தலைமையில் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

----------


Next Story