பாலங்களில் மழைநீர் செல்ல அடைப்பை நீக்கும் பணி
வந்தவாசி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்களில் இடையூறாக உள்ள அடைப்பை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்களில் இடையூறாக உள்ள அடைப்பை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடாக நெடுஞ்சாலைத்துறை மூலம் கால்வாய், ஓடை பாலங்களில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ள அடைப்புகளை நீக்கும் பணி நடைபெற்றது. செய்யாறு கோட்ட பொறியாளர் ராஜகணபதி உத்தரவின் பேரில் வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் ஆர்.தியாகராஜன் மற்றும் உதவிப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் கால்வாய்களில் வரும் தண்ணீர் வீணாகாமல் ஏரிகள் குளங்களுக்கு சென்று பாசனத்துக்கு பயன்படும் வகையில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர்.
Related Tags :
Next Story